

தேனி: தேனி வீரபாண்டி முல்லை நகரைச் சேர்ந்த கண்ணன் மகள் விமலா தேவி (28). மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்தார். அப்போது, ஒத்தக்கடையைச் சேர்ந்த யூடியூபர் சுதர்சனுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்களுக்கு கடந்த ஆண்டு மார்ச் 1-ம் தேதி திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விமலாதேவி புகார் அளித்தார். அதில், “திருமணத்தின்போது 30 பவுன் நகையும், ரூ.5 லட்சமும் வரதட்சணையாக வழங்கப்பட்டது. 30 பவுன் நகையை விற்றதுடன், மேலும் ரூ.10 லட்சம் கேட்டு வாங்கினர். தற்போது, கூடுதலாக 20 பவுன் நகை கேட்டு கணவர் குடும்பத்தினர் துன்புறுத்துகின்றனர்” என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து, சுதர்சன், அவரது தந்தை சுந்தர்ராஜன், தாயார் மாலதி உள்ளிட்ட 5 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.