

திருப்பூர்: திருப்பூர் குமரானந்தபுரம் இந்து முன்னணி பிரமுகர் பாலமுருகன் (30) என்பவர், கடந்த 25-ம்தேதி அதிகாலை நேரத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த இந்து முன்னணி முன்னாள் பிரமுக ரான சுமன் (34), அவரது நண்பரான திருப்பூரை சேர்ந்த தமிழரசன் (26) ஆகி யோரை திருப்பூர் வடக்கு போலீஸார் கைது செய்தனர்.
சம்பவத்தின் போது அங்கிருந்த நரசிம்ம பிரவின் (29). அஸ்வின் (29) ஆகி யோரை தனிப்படை போலீஸார் தொடர்ந்து தேடிவந்தனர். தற்போது அவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக போலீஸார் கூறும் போது, "கொலையில் ஈடுபட்ட போயம் பாளையத்தை சேர்ந்த நரசிம்ம பிரவின், திருப்பூர் காந்திநகரை சேர்ந்த அஸ்வின் ஆகியோரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். கொலைக்கு பயன் படுத்தப்பட்ட ஆயுதம் ராமலிங்கம் (34) என்பவரின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. இந்த வழக்கில் அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சுமனுக்கும். கொலை செய்யப்பட்ட பாலமுருகனுக்கும் பிரச்சினை இருந்தது. இந்நிலையில் சுமன். நரசிம்ம பிரவினிடம் சொல்லவே. அவர் கொலை செய்துள்ளார். தமிழரசன் இருசக்கர வாகனத்தில் அஸ்வின், இருசக்கர வாகம் நரசிம்ம பிரவினை அழைத்துச் சென்றதும் தெரியவந்தது. வழக்கில் அனைவரும் கைது செய்யப்பட்டனர்" என்றனர்.