

சென்னை: மயக்க ஊசி போட்டு, 8 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக போலீஸ் எஸ்ஐ மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமிக்கு தாயார் இல்லை. தந்தையும், தாத்தாவும் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், இந்த சிறுமி நேற்று முன்தினம் மாலை வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போய்விட்டார்.
இதையடுத்து, தாத்தாவும், தந்தையும் சிறுமியை சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக தேடியும் சிறுமியைக் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்நிலை யில் நுங்கம்பாக்கம் ஏரிக்கரை தெருவில் உள்ள ஆயுதப்படை எஸ்ஐ ஒருவரது வீட்டில் சிறுமி மயக்க நிலையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த சிறுமியின் தந்தை, மகளை மீட்டு உடனடியாக மருத்துவ மனையில் சேர்த்தார்.
நள்ளிரவில் முற்றுகை: முன்னதாக மகள் மயக்க நிலையில் கிடப்பது குறித்து கேட்டபோது எஸ்ஐ குடும்பத்தினர் அவரிடம் சண்டையிட்டுள்ளனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட எஸ்ஐ சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி சிறுமியின் குடும்பத்தினரும், உறவினர்களும் குற்றச்சாட்டுக்கு உள்ளான எஸ்ஐ வீட்டை நள்ளிரவில் முற்றுகையிட்டு போராட் டம் நடத்தினர். இதில், இருதரப்பின ருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து நுங்கம்பாக்கம் போலீஸார் சம்பவ இடம் விரைந்து இரு தரப்பையும் சமாதானம் செய்தனர். பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே, பாதிப்புக்கு உள்ளான சிறுமி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் தனக்கு மயக்க ஊசி போட்டு பாலியல் அத்துமீறல் நடந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
விவகாரம் பெரிதானதையடுத்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் வனிதா நேரடி விசாரணை யில் இறங்கி உள்ளார். குழந்தைகள் நல அதிகாரி களும் விசாரணை மேற் கொண்டுள்ளனர். இந்த சம்பவம் நுங்கம் பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றச்சாட்டுக்கு உள்ளான எஸ்ஐ தவறு செய்திருந்தால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதி காரிகள் தெரிவித்தனர்.