

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பள்ளி மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கூட்டுப் பாலியல் சீண்டல் செய்யப்பட்ட சம்பவத்தில் 8-ம் வகுப்பு மாணவர் உட்பட 3 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த தம்பதியின் மகள் கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு முடித்துள்ளார். அவர் தற்போது 11-ம் வகுப்பு சேர்ந்துள்ளார். மாணவி, அதே ஊரைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவர், 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 2 பேர் ஆகியோர் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.
இந்த 3 சிறுவர்கள், அஜய் (22) என்ற இளைஞர் ஆகியோர் சேர்ந்து அந்த சிறுமியை பூங்காவுக்கு அழைத்துச் சென்று, அவருக்கு குளிர்பானம் வாங்கி கொடுத்துள்ளனர். குளிர்பானத்தை அருந்திய சிறுமி அரை மயக்க நிலைக்கு சென்ற பின்னர் 4 பேரும் அவருக்கு பாலியல் சீண்டல் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக காஞ்சிபுரம் மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்னர். இது தொடர்பாக அஜய் உட்பட 3 பேரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
மாணவி மயக்க நிலையில் இருந்ததால் பாலியல் சீண்டல் மட்டும் நடந்ததா? அல்லது அவர்களில் யாரேனும் அந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனரா என்று பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். தேவைப்பட்டால் அந்த மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.