தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் அதிர்ச்சி சம்பவம்: 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்; காவலாளி கைது

கைது செய்யப்பட்ட காவலாளி. | படம்:எம்.முத்துகணேஷ் |
கைது செய்யப்பட்ட காவலாளி. | படம்:எம்.முத்துகணேஷ் |
Updated on
2 min read

தாம்பரம்: ​தாம்​பரம் சானடோரி​யம் பகு​தி​யில் உள்ள அரசு சேவை இல்​லத்​தில் தங்​கிப் படித்த 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் துன்​புறுத்​தல் அளித்த அரசு சேவை மைய காவலா​ளியை போக்சோ சட்டத்தில் போலீ​ஸார் கைது செய்​தனர். தாம்​பரம் சானடோரி​யம் ஜட்ஜ் காலனி பகு​தி​யில் தமிழக அரசின் சமூக நலத்​துறை சார்​பாக அரசு சேவை இல்​லம் செயல்​பட்டு வரு​கிறது.

இதில் தமிழ்​நாடு முழு​வதும் பல்​வேறு மாவட்​டங்​களில் இருந்து 128 மாணவி​கள் தங்கி கல்​லூரி​கள், பள்​ளி​களில் பயின்று வரு​கின்​றனர், இந்​நிலை​யில், கள்​ளக்​குறிச்சி மாவட்​டத்​தைச் சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த 4 நாட்​களுக்கு முன்பு அரசு சேவை இல்​லத்​தில் சேர்ந்து குரோம்​பேட்​டை​யில் உள்ள அரசு மகளிர் பள்​ளி​யில் 8-ம் வகுப்பு சேர்ந்​துள்​ளார்.

இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் 8-ம் தேதி அதி​காலை சேவை இல்​லத்​தில் இருந்து எழுந்து வரும்​போது மர்ம நபர் மாணவி முகத்​தில் கைவைத்து அழுத்தி மயக்​கம் அடைய செய்து பாலியல் தொந்​தரவு கொடுத்​த​தாக கூறப்​படு​கிறது. இதில் முகம் மற்​றும் கால்​களில் பலத்த காயம் ஏற்​பட்​ட தோடு கால் எலும்பு முறிவு ஏற்​பட்​ட​தாக​வும் கூறப்​படு​கிறது. அந்த மாணவி வலி தாங்க முடி​யாமல் சத்​தம் போட்​ட​தால் அங்​கிருந்து மர்ம நபர் தப்​பிச் சென்​றுள்​ளார். அப்​போது, அரு​கில் இருந்த மாணவி​கள் மற்​றும் பாது​காவலர்​கள் அவரை மீட்டு தாம்​பரம் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்​கப்​பட்ட நிலை​யில் மேல் சிகிச்​சைக்​காக ராஜீவ் காந்தி அரசு மருத்​து​வ​மனைக்கு அவர் அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ளார். சிட்​ல​பாக்​கம் போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யில் சிட்​ல​பாக்​கம் பெரி​யார் நகர் பகு​தியை சேர்ந்த அரசு சேவை மைய காவலாளி மேத்யூ (49) என்​பவர்​தான் பாலியல் தொல்லை கொடுத்​தவர் என்​பது தெரிய​வந்​தது. இதனைத் தொடர்ந்து போக்சோவில் அவரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

அமைச்சர் தகவல்: இதுகுறித்​து, அமைச்​சர் கீதா ஜீவன் கூறும் போது, ”குழந்தையின் தாயாரை சந்​தித்​தும் பேசி​யுள்ளேன். அந்த இல்​லத்​தில் 8 சிசிடிவி கேமரா பதிவு மூலம் அங்​குள்ள மேத்யூ என்ற காவலரை காவல்​துறை​யினர் கைது செய்​துள்​ளனர். அடுத்​தகட்​ட​மாக, உடனடி​யாக, 3 பெண் காவலர்​களை அங்கு நியமிக்க ஆட்​சி​யரிடம் அறி​வுறுத்​தி​யுள்​ளோம். அங்​குள்ள மாணவி​களிடம் நாங்​கள் விசா​ரித்​த​தில், அந்த காவலர் நல்​ல​வர், எங்​கள் தந்தை மாதிரி என்​று​தான் கூறுகின்​றனர். பாதிக்​கப்​பட்ட மாண​வி​யும் 5 நாட்​கள் முன்​பு​தான் இங்கு வந்​துள்​ளார்.

கூடு​தலாக அந்த வளாகத்​தில் சிசிடிவி வைக்​க​வும் நடவடிக்கை எடுத்​துள்​ளோம். பாது​காப்​பான இடம் தான். இனி பெண்​களுக்​கான எல்லா இல்​லங்​களி​லும், குறிப்​பாக அன்னை சத்​தியா இல்​லம் மற்​றும் இது போன்ற சேவை இல்​லங்​களில், தொண்டு நிறு​வனங்​கள் நடத்​தும் இல்​லங்​களி​லும் இனி பெண் காவலர் மட்​டுமே நியமிக்க வேண்​டும் என்று முடி​வெடுத்​துள்​ளோம். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

தலைவர்கள் கண்டனம்: அ​தி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி வெளி​யிட்ட எக்ஸ் தள பதி​வில், ‘அரசு சேவை இல்​லத்​திலேயே மாணவிக்கு பாது​காப்பு இல்லை என்​பது இந்த அரசு முற்​றி​லும் செயலிழந்து நிற்​ப​தையே உணர்த்​துகிறது. இதற்கு முதல்​வர் வெட்​கித் தலைகுனிய வேண்​டும். தமிழகம் டெல்​லிக்கு அவுட் ஆப் கண்ட்​ரோலாக இருப்​ப​தாகயாரோ எழு​திக் கொடுத்த டயலாக்கை பேசும் முதல்​வரே, உங்​கள் ஆட்​சி​யில் அவுட் ஆப் கண்ட்​ரோலாக இருக்​கும் பாலியல் ‘சார்​’களை எப்​போது கண்ட்​ரோல் செய்​யப் போகிறீர்​கள்’ என தெரி​வித்​துள்​ளார்.

தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை, ‘தமிழகம் முழு​வது​மே, பெண்​களுக்கு எதி​ரான பாலியல் தாக்​குதல் வழக்​கு​கள், திமுக அரசால் பொறுப்​பின்றி கையாளப்​படு​வதன் விளைவு, சமூக விரோ​தி​களுக்கு சட்​டத்​தின் மீதும், காவல்​துறை​யின் மீதும் சிறிதும் பயமில்​லாமல் போய்​விட்​டது. குற்​றம் நடை​பெற்ற பிறகு, குற்​ற​வாளியை பிடித்து விட்​டோம் என்று பெருமை பேசிக் கொண்​டிருக்​கும் திமுக அரசு, குற்​றம் நடக்​காமல் தடுப்​பது​தான் அரசின் முதல் கடமை என்​ப​தை மறந்து போய்விட்டது என தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே. வாசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in