Published : 08 Jun 2025 06:54 AM
Last Updated : 08 Jun 2025 06:54 AM

​வாழப்பாடி அருகே கார் விபத்தில் பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழப்பு

சேலம்: சேலம் மாவட்​டம் வாழப்​பாடி புதுப்​பட்டி மாரி​யம்​மன் கோயில் அருகே நெடுஞ்​சாலை​யில் நேற்று சென்ற கார், திடீரென நிலை தடு​மாறி, சாலை​யின் தடுப்புச் சுவரில் மோதி​யது. இதில் காரில் பயணம் செய்த கர்​நாட​காவைச் சேர்ந் ராணா ராம், ஜோகா ராம், ஜோத்தி தேவி ஆகியோர் அந்த இடத்​திலேயே உயி​ரிழந்​தனர்.

மேலும், காரில் இருந்த ஜோகாதேவி, ஜோத்தா ராம், அம்​மி​யா,மற்​றொரு ஜோகா தேவி ஆகியோர் பலத்த காயமடைந்​து,வாழப்​பாடி அரு​கேயுள்ள தனியார் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டனர் அங்கு ஜோகா தேவி சிகிச்சை பலனின்றி உயி​ர் இழந்​தார். மற்ற 3 பேருக்​கும் தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது.

விபத்து குறித்து தகவலறிந்த வாழப்​பாடி போலீ​ஸார்,விபத்​தில் உயி​ரிழந்த நால்​வரின் உடல்​களை​யும் பிரேதப் பரிசோதனைக்​காக சேலம் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x