150 ரூபாய் கடனுக்காக தொழிலாளி கொலை: ஆத்தூர் அருகே 5 பேர் மீது வழக்குப் பதிவு

150 ரூபாய் கடனுக்காக தொழிலாளி கொலை: ஆத்தூர் அருகே 5 பேர் மீது வழக்குப் பதிவு
Updated on
1 min read

ஆத்தூர் அருகே ரூ.150 கடன் வாங்கித் தர மறுத்துவரை கட்டி வைத்து அடித்து கொலை செய்த கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெத்த நாயக்கன் பாளையம் ஒட்டப்பட்டியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி சுப்பிரமணி (22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த கமலக் கண்ணன் (30) என்பவரிடம் ரூ.150 கடன் பெற்றுள்ளார். பின்னர் கடன் தொகையை கமலக் கண்ணன் கேட்டுள்ளார். அவர் பணம் இல்லை என கூறியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த கமலக்கண்ணன் தனது நண்பர்களான அருண் பாண்டியன், அலெக்ஸ் பாண்டியன், கார்த்திக், பெரியசாமி ஆகியோருடன் சேர்ந்த சுப்பிரமணியத்தை கட்டி வைத்து அடித்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சுப்பிரமணியத்தை உறவினர்கள் மீட்டு பெத்த நாயக்கன் பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே சுப்பிரமணி உயிரிழந்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் ஏத்தாப்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கமலக் கண்ணன் உள்ளிட்ட 5 பேரை தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in