

செய்யாறு: செய்யாறு அருகே தந்தையின் கொலைக்குப் பழிக்குப்பழியாக ஆட்டோ ஓட்டுநரைக் கடத்திச் சென்று கொலை செய்த மகன் உள்ளிட்ட நான்கு பேரைக் காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தந்தை கொலை செய்யப்பட்ட இடத் திலேயே ஆட்டோ ஓட்டுநரின் உடலை மூட்டை கட்டி வீசி மகன் பழிதீர்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் பிரம்மதேசம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன் (35) என் பவரைக் கொலை செய்து அவரது உடலை அங்குள்ள டாஸ்மாக் மதுபான கடை அருகேயுள்ள பங்க் கடையின் முன்பாக மூட்டை கட்டி வீசியுள்ளதாகக் கூறி பிரம்ம தேசம் காவல் நிலையத்தில் நேற்று காலை 4 பேர் சரணடைந்தனர்.
இந்த தகவலை அடுத்து பிரம்மதேசம் காவல் நிலைய ஆய்வாளர் கோகுல்ராஜ் மற்றும் காவலர்கள் விரைந்து சென்று டாஸ்மாக் கடை அருகே உள்ள பங்க் கடையின் முன்பாக கிடந்த மணிகண்டனின் உடலை மீட்டனர். அவரது உடலைப் பிரேதப் பரிசோ தனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், காவல் நிலையத்தில் சரணடைந்த 4 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
அதில், சரணடைந்தவர்கள் பிரம்மதேசம் பகுதியைச் சேர்ந்த விஜய் (27), சொந்தமாக நெல் அறுவடை இயந்திரம் மற்றும் டிராக்டர் வைத்து தொழில் செய்து வருகிறார். வேல்முருகன் (24) என்பவர் சென்னை ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். குத் தனூர் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுரங்கம் (24) என்பவர் கேட்ரிங் வேலை செய்து வருகிறார். சித்தனைக்கால் கிராமத்தைச் சேர்ந்த சபரிவாசன் (20) என்பவர் டிராக்டர் ஓட்டுநராக பணியாற்றி வருவது தெரியவந்தது.
பழிக்குப்பழியாகக் கொலை: கொலைக்கான காரணம் குறித்து நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில், கொலையான மணிகண்டன் திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் என குடும் பத்துடன் கடந்த 7 ஆண்டுகளாகக் காஞ்சிபுரம் அருகேயுள்ள வெங்கடாவரம் பகுதியில் வசித்து வருகிறார்.
அங்கு, ஆட்டோ ஓட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. மணிகண்டன் உடல் கண்டெடுக் கப்பட்ட இடத்தில் கடந்த 2017-ம் ஆண்டு பாஸ்கரன் என்பவர் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டார். அந்த கொலையில் மணி கண்டன் முக்கிய குற்றவாளி. விஜயின் தந்தையான பாஸ்கரன் கொலைக்குப் பழி வாங் கவே அவரது மகன் விஜய் கூட்டாளி களுடன் சேர்ந்து மணிகண் டனைக் கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.
முன்னதாக, காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் தனியாகச் சென்ற மணிகண்டனை விஜய் தலைமையில் சென்ற கும்பல் நேற்று காலை கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர். பின்னர், அவரது உடலை பிளாஸ்டிக் கோணிப்பையில் கட்டி பாஸ்கரன் கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட டாஸ்மாக் மதுபான கடை அருகே யுள்ள அதே பங்க் கடையின் முன்பாக வீசியது தெரியவந்தது.
கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 19-ம் தேதி பாஸ்கரன் கொலை தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த விநாயகம், அவ ரது நண்பரான மணிகண்டனை காவல் துறையினர் கைது செய்தனர். வழக்கில் முக்கிய குற்றவாளியான விநாயகம் அடுத்த மூன்று நாட்களிலேயே அதாவது 22.6.2017 அன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். முதல் குற்றவாளி தற்கொலை செய்துகொண்டதால் இரண்டாம் குற்றவாளியான மணிகண்டன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் கடந்த 2022-ம் ஆண்டு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
தந்தை பாஸ்கரனின் கொலையில் தொடர்புடைய மணி கண்டனை 8 ஆண்டுகளாகக் காத்திருந்து விஜய் பழிவாங்கி யுள்ளார். இதை யடுத்து, விஜய் உள்ளிட்ட நான்கு பேரை யும் கைது செய்த காவல் துறை யினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.