சர்க்கார் விரைவு ரயிலில் 8 கிலோ கஞ்சா கடத்தல்: ஆர்.பி.எஃப் போலீஸார் விசாரணை

சர்க்கார் விரைவு ரயிலில் 8 கிலோ கஞ்சா கடத்தல்: ஆர்.பி.எஃப் போலீஸார் விசாரணை

Published on

சென்னை: ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்த சர்க்கார் விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடைந்த பையில் 8 கிலோ கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனை கைப்பற்றிய எழும்பூர் ஆர்.பி.எஃப் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்தடையும் விரைவு ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக எழும்பூர் ஆர்.பி.எஃப் ஆய்வாளர் கே.பி.செபாஸ்டினுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆர்.பி.எஃப் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை (இன்று) அதிகாலை முதல் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

காலை 6 மணி அளவில்,9-வது நடைமேடையில் ஆந்திரா மாநிலம் காக்கி நாடா துறைமுகத்தில் இருந்து சென்னை எழும்பூர் வழியாக செங்கல்பட்டுக்கு செல்லும் சர்க்கார் விரைவு ரயில் வந்தது. அந்த ரயிலில் பொதுபெட்டியில் சோதித்தபோது, அதில் கேட்பாரற்று ஒரு பை நீண்ட நேரமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த பை குறித்து பயணிகளிடம் கேட்டபோது, உரிமைக் கோரி பெற யாரும் முன்வரவில்லை என கூறியுள்ளனர்.

இதையடுத்து, அந்தபையை எடுத்து, திறந்து பார்த்த போது, அதில் 8 கிலோ எடைக்கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. இதன் மதிப்பு சுமார் ரூ.4 லட்சம். இதையடுத்து, ஆர்பிஎஃப் காவல் நிலையத்துக் கு எடுத்து வந்து, வழக்குப் பதிந்தனர். இந்த கஞ்சா பொட்டலங்களை சார்க்கார் விரைவு ரயிலில் யார் கடத்தி வந்தார். எங்கிருந்து கடத்தி வந்தார் தொடர்பாக விசாரித்து வருகின்றனர். மேலும்,கஞ்சா பொட்டலங்களை மதுபான தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in