

திருவள்ளூர்: அம்பத்தூர் அருகே போலி ஆவணங்களை பயன்படுத்தி நிலமோசடியில் ஈடுபட்ட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை, கொடுங்கையூர், விவேகானந்தர் நகர், டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலையில் வசித்து வரும் எஸ்.ரீகன் பால் என்பவர். ஆவடி காவல் ஆணையரகத்தில் அளித்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: திருவள்ளூர் மாவட்டம், அம் பத்தூரை அடுத்த பம்மதுகுளம் கிராமத்தில், ஏக்கர் 3.86 சென்ட் நிலத்தை கடந்த 2005ம் ஆண்டு ஜி.அரி பாபு என்பவரிடமிருந்து வாங்கி, எனது தாயார் இன் கீரிட் லீனா பெயரில் செங்குன்றம் சார் - பதிவாளர் அலுவலகத்தில் கிரயம் பெற்று பட்டா மற்றும் இதர ஆவணங்களை பெற்று அனுபவித்து வந்தார்.
இந்நிலையில், 2006ம் ஆண்டு வேபா ஏ.முராரி, கமலா இ.சர்மா. வேபா கே.சதாசிவம் ஆகிய மூவரும் எனது தாயார் பெயரில் உள்ள நிலத்தை அவர் கள் நிலம் என கூறி, ராமகண்ணன் என்பவருக்கு ஒரு பொது அதிகாரம் வழங்கி. செங்குன்றம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து நிலத்தை அபகரிக்க முயன்றனர்.
இது தொடர்பாக, பூவிருந்தவல்லி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யபட்டு, தற்போது, அம்பத்தூர் சார்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இவ்வழக்கு, இன்னும் ஒரு மாதத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
காலாவதியான பொது அதிகாரம்: இதற்கிடையே,ராம கண்ணன் என்பவருக்கு பவர் வழங்கிய வேபா ஏ.முராரி என்பவர் கடந்த 2023ம் ஆண்டு காலமாகியிருந்தார். அந்த பொது அதிகாரமும் அன்றைய தினமே காலாவதி யாகி விட்டது. இதனால், இவ் வழக்கில் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வரும் என அறிந்து, அவ்வாறு தீர்ப்பு வந்தால், எங் களது சொத்தை அபகரிக்க முடியாது என அறிந்து, வழக்கு முடிவதற்கு முன்பே அபகரிக்க வேண்டி,கமலா இ.சர்மா. ராம கண்ணன், ராமகிருஷ்ணன், ஞானமூர்த்தி, காஞ்சனா, குமர
வேல், நெல்லியப்பன், கோவிந் தசாமி, ரவீந்திரன் மற்றும் சிலர் கூட்டு சதி செய்து முராரி இறந்த அன்றே, ராமகண்ணன் என்பவர் பொது அதிகார முகவராக செங் குன்றம் சார் - பதிவாளர் அலு வலகத்தில் பதிவு செய்து, எங் களது சொத்தில் 2/3 பங்கை, ராமகிருஷ்ணன், ஞானமூர்த்தி, காஞ்சனா, குமரவேல் ஆகியோ ருக்கு பல கோடி ரூபாய் மதிப் புள்ள நிலத்தை சில லட்சங் களுக்கு விற்பனை செய்துள் ளனர்.
எனவே, இதுதொடர்பாக. கமலா இ.சர்மா, ராம கண்ணன், ராமகிருஷ்ணன், ஞானமூர்த்தி, காஞ்சனா, குமரவேல், நெல் லியப்பன், கோவிந்தசாமி, ரவீந் திரன் மற்றும் சிலர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப் பிடப்பட்டிருந்தது.
இது குறித்து, ஆவடி காவல் ஆணையரக நில பிரச்சினை தீர்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து. விசாரணை நடத்தினர். அப்போது, செங்குன்றம் பகுதியில் பதுங்கியிருந்த பம்மதுகுளம் கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன். ஞானமூர்த்தி ஆகிய இருவரையும் கைது செய்து, பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.