சிங்கம்புணரி குவாரி விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம்: இருவர் கைது; உரிமையாளர் தலைமறைவு

சிங்கம்புணரி குவாரி விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம்: இருவர் கைது; உரிமையாளர் தலைமறைவு
Updated on
1 min read

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே கல் குவாரியில் பாறை சரிந்து விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவத்தில் இருவரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள குவாரி உரிமையாளரை தேடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டையில் தனியார் கல் குவாரி உள்ளது. இங்கு மே 20-ம் தேதி 400 அடி ஆழ பள்ளத்தில் பாறை சரிந்து விழுந்ததில் பொக்லைன் ஓட்டுநர் உட்பட பல தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து குவாரி உரிமத்தை தற்காலிகமாக மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் ரத்து செய்தார்.

இச்சம்பவம் குறித்து குவாரி உரிமையாளர் மல்லாக்கோட்டையைச் சேர்ந்த மேகவர்ணம் (48) மீது டிஎஸ்பி செல்வகுமார் தலைமையிலான எஸ்.எஸ்.கோட்டை போலீஸார் வழக்கு பதிந்தனர். மேகவர்ணம் தலைமறைவான நிலையில், அவரின் தம்பி கமலதாசன் (45), மதுரை மாவட்டம் இ.மலம்பட்டியைச் சேர்ந்த குவாரி மேற்பார்வையாளர் கலையரசன் (32) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மேகவர்மனை போலீஸார் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in