

கோவை: கோவை விமான நிலையத்துக்கு சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட பயணியை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கைது செய்தனர்.
கோவை விமான நிலையத்துக்கு இன்று (மே 22) காலை சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த முகமது பாசில் (24) என்ற பயணியிடம் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் அவர் ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரை கைது செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.