

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப் பூண்டி அருகே செயல்படாத தனியார் பீர் தொழிற்சாலையில் இருந்து இரும்பு பொருட்கள், பொக்லைன் இயந்திரங்களை திருடியதாக 5 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி அருகே பில்லாகுப்பம் பகுதியில் உள்ள செயல்படாத தனியார் பீர் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த தொழிற்சாலைக்குள் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர், அத்துமீறி நுழைந்து பழைய பீர் பாட்டில்களை திருடிச் சென்று குடிப்பது வழக்கமாக இருந்ததாகக் கூறப்படு கிறது. இதையடுத்து, அரசு உத்தரவின் பேரில் பழைய பீர் பாட்டில்கள் அழிக்கப்பட்டுள்ளன.
மேலும், வங்கிக்கு உடமையாக்கப்பட்டு தனியார் பாதுகாவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வந்த பீர் தொழிற்சாலையில் கடந்த வாரம் பாதுகாவலரை கட்டிப் போட்டுவிட்டு, லாரிகள் மூலம் தொழிற்சாலையின் உள்ளே இருந்த இரும்பு பொருட்கள் மற்றும் பொக்லைன் இயந்திரங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இது குறித்து, வழக்குப் பதிவு செய்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார் விசாரணை நடத்தினர். இதனிடையே, ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியி ல் மறைந்திருந்த, கும்மிடிப்பூண்டி அருகே உள்ள எளாவூரைச் சேர்ந்த குமர குருபரன் (34), சாமிரெட்டி கண்டிகையை சேர்ந்த ஆனந்த் ராஜ் (35), நடராஜன் (35), ஏடூரைச் சேர்ந்த ஆனந்தன் (34), பொன்னேரியைச் சேர்ந்த ரமேஷ் (27) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.