

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த விளக்கேத்தி மேகரையான் தோட்டத்தில் வசித்து வந்த வயதான தம்பதி ராமசாமி - பாக்கியம் ஆகியோர் பணம், நகைக்காக கடந்த மாதம் 29-ம் தேதி இரவு கொலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக அறச்சலூர் ஜல்லிமேடு ராம்நகர் ஆச்சியப்பன் (48), மேற்கு வீதி மாதேஸ்வரன் (53), நடுப்பாளையம் ரமேஷ் (52) ஆகியோரை நேற்று முன்தினம் இரவு போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்று, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “சிவகிரி தம்பதி கொலை வழக்கில் 3 பேரிடம் விசாரித்து வருகிறோம். தேங்காய் வியாபாரிகள் என்ற போர்வையில் தனியாக உள்ள தோட்ட வீடுகளுக்குச் சென்று நோட்டமிட்டு, கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். பல்லடம் உள்ளிட்ட வெவ்வேறு இடங்களில் நடந்த கொலை வழக்குகள் தொடர்பாகவும் இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இன்று (மே 19) முறைப்படி கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்” என்றனர்.