Published : 12 May 2025 06:09 AM
Last Updated : 12 May 2025 06:09 AM

சேலத்தில் மளிகை கடை நடத்தி வந்த முதிய தம்பதியை கொலை செய்து நகைகள் கொள்ளை

சேலம் ஜாகீர் அம்​மா​பாளை​யத்​தில் தம்​பதி கொலை செய்​யப்​பட்ட வீட்​டின் அரு​கே மோப்​ப​நாய் உதவி​யுடன் சோதனை நடத்​திய போலீ​ஸார். (உள்படம்) சேலத்தில் நகைக்காக கொலை செய்யப்பட்ட வித்யா - பாஸ்கரன்.

சேலம்: மளி​கைக் கடை நடத்தி வந்த முதிய தம்​ப​தி​யைக் கொன்​று, நகைகளைக் கொள்​ளை​யடித்​துச் சென்ற கும்​பலை சேலம் போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர். சேலம் சூரமங்​கலத்தை அடுத்த ஜாகீர் அம்​மா​பாளை​யம் பகு​தி​யைச் சேர்ந்​தவர் பாஸ்​கரன் (65). இவர், தனது வீட்​டின் ஒரு பகு​தி​யில் மளி​கைக் கடை நடத்தி வந்​தார். இவரது மனைவி வித்யா (60).

இந்​நிலை​யில் நேற்று மதி​யம் பாஸ்​கரனும், வித்​யா​வும் வீட்​டில் ரத்த வெள்​ளத்​தில் கிடந்​தனர். இதைக் கண்ட அப்​பகுதி மக்​கள் அதிர்ச்​சி​யடைந்​து, போலீ​ஸாருக்​குத் தகவல் தெரி​வித்​தனர். போலீ​ஸார் அங்கு சென்று பார்த்​த​போது, வித்யா உயி​ரிழந்து கிடந்​தார். பலத்த காயத்​துடன் இருந்த பாஸ்​கரனை போலீ​ஸார் மீட்​டு, சேலம் அரசு மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றனர். ஆனால், வழி​யிலேயே அவர் உயி​ரிழந்​தார். முதல் கட்ட விசாரணையில் இரு​வரும் கொலை செய்​யப்​பட்​டது தெரிய​வந்​தது.

கொல்லப்பட்ட வித்யாவின் சடலத்தை மீட்ட போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சேலம் மாநகர காவல் ஆணை​யர் பிர​வீன் குமார் அபிநபு, துணை ஆணை​யர் சிவ​ராமன் ஆகியோர் அங்கு சென்​று, விசா​ரணை நடத்​தினர். வித்யா அணிந்​திருந்த நகைகள் மாய​மாகி இருப்​பது தெரிய வந்​தது.

எனவே, இரு​வரும் நகைக்​காக கொலை செய்​யப்​பட்​டிருக்​கலாம் என்று சந்​தேகிக்​கப்​படு​கிறது. கொலை​யான பாஸ்​கரனின் மகன், அந்த வீட்​டின் மாடி​யில் வசித்து வரு​வது குறிப்​பிடத்​தக்​கது. பகல் நேரத்​தில், மக்​கள் நடமாட்​டம் மிகுந்த வீதி​யில் நடந்த இரட்டை கொலை சம்​பவம் சேலம் மக்​களிடையே அதிர்ச்​சியை ஏற்​படுத்தி உள்​ளது. இது தொடர்​பாக போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து, கொலை​யாளி​களைத் தேடி வரு​கின்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x