

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை போலீஸார் கைது செய்தனர். சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்த 27 வயது இளம்பெண், கடந்த 7-ம் தேதி இரவு வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு, குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வீட்டின் அருகே வசித்து வரும் காமேஷ் (54) என்பவர், இளம்பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார்.
உடனே அந்த பெண் கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு குடும்பத்தினர் வருவதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டா. இது குறித்து மாதவரம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸார், தலைமறைவாக இருந்த காமேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.