Published : 07 May 2025 06:40 AM
Last Updated : 07 May 2025 06:40 AM

சென்னை | தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் ரூ.30 லட்சம் கையாடல்: பெண் ஊழியர் கைது

சென்னை: தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் ரூ.30 லட்சம் கையாடல் செய்ததாக அந்நிறுவன பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார். சென்னை திருமங்கலத்தில் பிரசாந்த் (48) என்பவர் வெங்கடேஷ்வரா டிராவல்ஸ் என்ற பெயரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இந்நிறுவனத்தில் திருநின்றவூர் நடுக்குத்தகை பகுதியைச் சேர்ந்த ஜெயசித்ரா (39) என்பவர் கடந்த 13 வருடங்களாக நிர்வாகப் பிரிவில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் நிறுவனத்தின் வரவு செலவு கணக்குகளை பிரசாந்த் சரிபார்த்துள்ளார்.

அப்போது ரூ.30 லட்சம் கையாடல் நடைபெற்றது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் இது தொடர்பாக திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.

இதில், நிர்வாகப் பிரிவில் பணி செய்து வந்த ஜெயசித்ரா, கடந்த 2019-ம் ஆண்டுமுதல் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் பிரசாந்தின் வங்கிக் கணக்கிலிருந்து தனது குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகளுக்கு சிறுக, சிறுக பணத்தை பரிமாற்றம் செய்து மோசடி செய்து அவரது சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.

மேலும், மோசடி பணத்தில் இருசக்கர வாகனத்தையும் வாங்கியுள்ளார் என்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x