க்ரைம்
ஐபிஎல் டிக்கெட்டை கள்ளச் சந்தையில் விற்ற 4 பேர் கைது
ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்களை கள்ளச்சந்தையில் விற்ற 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் சென்னை - ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்த போட்டிக்கான டிக்கெட்களை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பவர்களை கண்டறிந்து கைது செய்ய சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டதன் பேரில், திருவல்லிக்கேணி போலீஸார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டபோது, ஐபிஎல் டிக்கெட்களை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்றதாக புரசைவாக்கத்தை சேர்ந்த டில்லிபாபு (33), புதுப்பேட்டை இம்ரான் (32), அண்ணாநகர் கார்த்திக் (31), காரனோடை சுரேந்தர் (23) ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 டிக்கெட்களை பறிமுதல் செய்யப்பட்டன.
