Published : 07 Apr 2025 12:52 AM
Last Updated : 07 Apr 2025 12:52 AM

சென்னை | கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை: 11 முகவர்கள் கைது

சென்னை: ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டிக்​கான டிக்​கெட்​டு​களை கள்​ளச் சந்​தை​யில் அதிக விலைக்கு விற்​பனை செய்​த​தாக கேரளாவைச் சேர்ந்​தவர் உட்பட 11 முகவர்​கள் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முன்​தினம் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை, டெல்லி அணி​கள் மோதின. இதில் டெல்லி அணி வெற்றி பெற்​றது.

முன்​ன​தாக இந்த போட்​டிக்​கான டிக்​கெட்​​களை சிலர் கள்​ளச் சந்​தை​யில் விற்​பனை செய்து வரு​வ​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது. இதையடுத்து திரு​வல்​லிக்​கேணி காவல் நிலைய போலீ​ஸார் சேப்​பாக்​கம் கிரிக்​கெட் மைதானம் மற்​றும் அதை சுற்​றி​யுள்ள பகு​தி​களில் தீவிர​மாக கண்​காணித்​தனர்.

அப்​போது, ஐபிஎல் டிக்​கெட்​​களை சட்ட விரோத​மாக அதிக விலைக்கு விற்​பனை செய்​தது தொடர்​பாக 10 வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டது. அதில், தொடர்​புடைய பட்​டாபி​ராம் அரவிந்த் (24), ஆலந்​தூர் ரூபேஷ் (24), ஆவடி விஷ்ணு (19), கொளத்​தூர் சேது ரோஷன் (20), திரு​வல்​லிக்​கேணி சந்​திரன் (52), அசோக்​நகர் ஸ்ரீராம் (25), கும்​மிடிப்​பூண்டி அரவிந்த் (20), திரு​வொற்​றியூர் சாலமன் (19), கேரள மாநிலத்​தைச் சேர்ந்த வினித் (28), சேப்​பாக்​கம் கார்த்​திக் (23), கோட்​டூர் மணி​கண்​டன் (26) ஆகிய 11 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

இவர்​கள் அனை​வரும் முகவர்​களாக செயல்​பட்​டுள்​ளனர். அவர்​களிட​மிருந்து கள்ள சந்தை மூலம் விற்​பனை செய்யவைத்​திருந்த 34 ஐபிஎல் டிக்​கெட்​டு​கள் மற்​றும் ரூ.30,600 பறி​முதல் செய்​யப்​பட்​டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x