பார்க்கிங் விவகாரத்தில் அடுத்தடுத்து வழக்கு பதிவு: ‘பிக் பாஸ்’ நடிகர் தர்ஷன் கைது

பார்க்கிங் விவகாரத்தில் அடுத்தடுத்து வழக்கு பதிவு: ‘பிக் பாஸ்’ நடிகர் தர்ஷன் கைது
Updated on
1 min read

சென்னை: பார்க்கிங் விவகாரத்தில், நீதிபதி மகன் அளித்த புகாரில் நடிகர் தர்ஷனை போலீஸார் கைது செய்தனர். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் தர்ஷன். இவர் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் ‘கூகுள் குட்டப்பா' என்ற படத்தில் நடித்திருந்தார். விளம்பரங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். சென்னை முகப்பேரில் வசிக்கிறார்.

இவரது வீட்டின் முன்பு உள்ள தேநீர் கடைக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் மகன் குடும்பத்தினருடன் காரில் வந்துள்ளார். அவர் தர்ஷனின் வீட்டு முன்பு காரை நிறுத்தி விட்டு தேநீர் கடைக்குள் சென்றுள்ளனர். நீண்ட நேரமாக அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை எடுக்குமாறு தர்ஷன் கூறியிருக்கிறார். இதனால், அவருக்கும், நீதிபதியின் மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறி உள்ளது.

இதில், நீதிபதியின் மகனுக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் நீதிபதியின் மகன் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையே, நீதிபதியின் மகன் தன்னை தாக்கியதாக தர்ஷனும் அதே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார்களின் அடிப்படையில் இரு தரப்பினர் மீதும் போலீஸார் அடுத்தடுத்து வழக்குப் பதிவு செய் தனர்.இந்நிலையில், தர்ஷனை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in