

புதுடெல்லி: கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு திரைப்பட வாய்ப்பு வழங்கிய இயக்குநர் சனோஜ் மிஸ்ரா, பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை விற்ற, ம.பி.யின் இந்தூரை சேர்ந்த மோனலிசா போன்ஸ்லே என்ற 16-வது சிறுமி திடீர் பிரபலம் ஆனார். அவருக்கு திரைப்பட இயக்குநர் சனோஜ் மிஸ்ரா தனது 'டைரி ஆப் வெஸ்ட் பெங்கால்’ திரைப்படத்தில் வாய்ப்பளிக்க முன்வந்தார். இது தொடர்பாக மோனலிசாவின் வீட்டுக்கே சென்று அவரது பெற்றோரை சந்தித்து பேசினார்.
இந்நிலையில் பாலியல் வன்கொடுமை வழக்கில் சனோஜ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.
திரைப்பட நாயகியாக விரும்பிய ஒரு சிறுமிக்கு வாய்ப்பு அளிப்பதாக கூறி அவரை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக சனோஜ் மிஸ்ரா மீது அண்மையில் டெல்லியில் வழக்கு பதிவானது. இந்த வழக்கில் சனோஜ் மிஸ்ராவின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்ததை தொடர்ந்து அவரை டெல்லி போலீஸார் நேற்று கைது செய்தனர்.