

சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 25) ஒரே நாளில் வேளச்சேரி, திருவான்மியூர், பள்ளிக்கரணை, சைதாப்பேட்டை உள்ளிட்ட ஏழுக்கும் மேற்பட்ட இடங்களில் அடுத்தடுத்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
ஏற்கனவே, கடந்த ஜனவரி மாதம் தாம்பரம் அருகே 8 இடங்களில் அடுத்தடுத்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றது. இந்நிலையில் இன்று (மார்ச் 25) ஒரே நாளில் வேளச்சேரி, திருவான்மியூர், பள்ளிக்கரணை, சைதாப்பேட்டை உள்ளிட்ட ஏழுக்கும் மேற்பட்ட இடங்களில் அடுத்தடுத்து செயின் பறிப்புச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
இந்நிலையில், செயின் பறிப்புச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளின் பின்னணியைக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, சென்னை உட்பட மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
விமானத்திலேயே கைது: இதற்கிடையில் நகைப் பறிப்பில் ஈடுபட்ட இருவரை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு துரிதமாக விசாரித்து பின் தொடர்ந்து அந்த இருவரை விமானத்திலேயே வைத்து போலீஸார் கைது செய்ததாக தகவல் வந்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் உத்தர பிரதேசத்தசைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தொடர்ச்சியாக இதுபோன்ற செயின் பறிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என்று கூறப்படுகிறது. சென்னை தாம்பரத்திலும் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்கள் இவர்கள்தானா என்பதையும் போலீஸார் விசாரித்து வருவதாகத் தெரிகிறது.