மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் பணிநீக்கம்

மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் பணிநீக்கம்
Updated on
1 min read

மேட்டூர் அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமை ஆசிரியர் ‘டிஸ்மிஸ்’ செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூரை அடுத்த கருங்கல்லுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜா, 52. இவர் 2023 ஆகஸ்ட் மாதம் அப்பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த கிராம மக்கள் அவரை தாக்கி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டம் நடத்தினர்.

பின்னர், போலீஸார் அவரை போக்ஸோ வழக்கில் கைது செய்தனர். இதுதொடர்பாக அவரை பணியிடை நீக்கம் செய்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. தொடர்ந்து, மாணவி மற்றும் பெற்றோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தாரமங்கலம் மாவட்ட கல்வி அலுவலர் ராஜூ விசாரணை அறிக்கையை, அரசுக்கு அனுப்பினார். தொடர்ந்து, ராஜாவை 'டிஸ்மிஸ்' செய்து தாரமங்கலம் மாவட்ட கல்வி அலுவலர் ராஜூ உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in