சென்னை | கற்கள் வீசி தாக்கி கொண்ட விவகாரம்: கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது

சென்னை | கற்கள் வீசி தாக்கி கொண்ட விவகாரம்: கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
Updated on
1 min read

சென்னை: கிண்டி ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் கற்கள் வீசி தாக்கிக் கொண்ட விவகாரத்தில், 3 மாணவர்களை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.

கடந்த மாதம் 14-ம் தேதி, கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரயிலில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். கிண்டி ரயில் நிலையம் அருகே சென்றபோது, நந்தனம் அரசு கல்லூரி மாணவர்கள், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை நோக்கி கற்களை வீசினர்.

இதில் ரயிலில் பயணம் செய்த வழக்கறிஞர் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீஸார் வழக்குபதிந்து, விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், நந்தனம் கல்லூரி மாணவர்களான பூந்தமல்லியைச் சேர்ந்த யுவராஜ்(19), சூர்யா(18), செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன்(19) ஆகிய மூன்று பேரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.

மேலும், இந்த 3 பேர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நந்தனம் அரசு கல்லூரி நிர்வாகத்துக்கு, மாம்பலம் ரயில்வே போலீஸார் கடிதம் எழுதியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in