

சென்னை: காரப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளி அருகே மாணவ, மாணவி களிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக சென்னை மாவட்ட (தெற்கு) குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
அதன்படி, போலீஸார் பாஜக மாநில செயலாளர் சூர்யா, முன்னாள் கவுன்சிலர் லியோ சுந்தரம், காரப்பாக்கத்தைச் சேர்ந்த பாஜக முன்னாள் செயலாளர் கோட்டீஸ் வரன் உள்பட பாஜகவைச் சேர்ந்த 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இவர்கள் மீது இளைஞர் நீதிச்சட்டம் 2015 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.