சென்னை | வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. கையில் வைத்திருந்த வாக்கி டாக்கி பறிப்பு

சென்னை | வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. கையில் வைத்திருந்த வாக்கி டாக்கி பறிப்பு
Updated on
1 min read

சென்னை: வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சிறப்பு எஸ்ஐ-யிடமிருந்து வாக்கி டாக்கியை பறித்துக் கொண்டு தப்பிய இளைஞர்களை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

சென்னை திருமங்கலம், போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐ-யாக பணியாற்றுபவர் செந்தில்குமார். இவர் நேற்று முன்தினம் அண்ணா நகர் மேற்கு பஸ் டெப்போ அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அந்த வழியாக அதிவேகமாக இருசக்கர வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது.

சந்தேகம் அடைந்த செந்தில்குமார் அந்த வாகனத்தை நிறுத்துமாறு சைகை காட்டினார். இதையடுத்து வாகனத்தை நிறுத்துவது போல் வந்த இளைஞர், திடீரென வேகத்தை அதிகரித்தார். இதற்கிடையில், பின்னால் அமர்ந்திருந்த மற்றொரு இளைஞர் சிறப்பு எஸ்ஐ-யின் கையில் இருந்த வாக்கி டாக்கியை பிடுங்கினார். பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பினர்.

அதிர்ச்சி அடைந்த செந்தில்குமார், இது தொடர்பாக திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அக்காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in