

ஓசூர்: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் 4 மாணவர்கள் உட்பட 5 பேரை ஓசூரில் போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வரும் 13 வயது மற்றும் 14 வயதுடைய 3 மாணவர்கள் உள்ளிட்ட 4 பேர் நண்பர்கள். இவர்கள் 4 பேரும் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு, கட்டிடப் பணிக்கு செல்லும் தங்களின் 15 வயதுள்ள நண்பரை பார்க்க நேற்று முன்தினம் சென்றனர்.
அந்தப் பகுதியில் கட்டிடப் பணியில் ஈடுபட்டிருந்த நண்பரை சந்தித்தனர். அப்போது, அங்குள்ள வீட்டில் அக்கா, தங்கைகளான 9 மற்றும் 13 வயது சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்த மாணவர்கள் உள்ளிட்ட 5 பேரும் அங்கு சென்று, சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் ஓசூர் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, 5 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.