Published : 01 Mar 2025 06:03 AM
Last Updated : 01 Mar 2025 06:03 AM

இலங்கையை சேர்ந்தவர்களை இந்தியா வழியாக கனடாவுக்கு சட்டவிரோதமாக கடத்த முயன்ற முக்கிய குற்றவாளி கைது

சென்னை: இந்தியா​வுக்​குள் சட்ட​விரோதமாக ஊடுருவி கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள தனியார் விடு​தி​யில் இலங்கை நாட்​டினர் தங்கவைக்​கப்​பட்​டிருப்​பதாக மங்களூரு போலீ​ஸாருக்கு கடந்த 2021-ம் ஆண்டு ரகசிய தகவல் கிடைத்​தது. அதன்​பேரில் அந்த விடு​திக்குச் சென்ற மங்களூரு போலீ​ஸார் அங்கிருந்த 32 இலங்கை நாட்​டினரை பிடித்து விசாரணை நடத்​தினர்.

அப்போது, அவர்​கள், கனடா​வில் வேலை வாங்​கித் தருவ​தாகக் கூறி ஒரு கும்பல் கள்ளப்​படகு மூலம் 2 கட்டமாக இலங்​கை​யில் இருந்து ராமநாத​புரத்​துக்​கும், தூத்​துக்​குடிக்​கும் அழைத்து வந்து, அங்கிருந்து ரயில், பேருந்து மூலம் மங்களூரு அழைத்து வந்த​தாக​வும், இங்கிருந்து அவர்கள் தங்களை கனடாவுக்கு அனுப்பி வைக்க உள்ளனர் என்றும் தெரி​வித்​துள்ளனர். இதற்​காக, லட்சக்கணக்​கில் அந்த கும்பல் பணம் பெற்றதாக​வும் தெரி​வித்​தனர்.

இதுதொடர்​பாக, கர்நாடக காவல்​துறை​யின் குற்​றப்​பிரிவு போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து விசாரணை நடத்​தினர். இதையடுத்து, இந்த விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்​றப்​பட்​டது.

இதில் 10 பேருக்கு இதில் தொடர்பு இருந்த நிலையில் 8 பேர் கைது செய்​யப்பட்டனர். 2 பேரை என்ஐஏ அதிகாரிகள் தேடி வந்த நிலையில், முக்கிய குற்​றவாளியான முகமது இப்ராகிம், சென்னை​யில் தலைமறைவாக இருப்​பதாக என்ஐஏ அதிகாரி​களுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்​தது.

அதைத்​தொடர்ந்து, தமிழக காவல்​துறை தீவிரவாத தடுப்பு பிரி​வினருடன் இணைந்து 9-வது குற்​றவாளியாக முகமது இப்ராகிமை நேற்று கைது செய்​தனர். மேலும் தலைமறைவாக உள்ள இம்​ரான் ஹாஜ்​யாரைத் தேடி வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x