

சென்னை: நங்கநல்லூரை சேர்ந்த ராஜேஷ் (31) அதே பகுதியில் தங்க நகைக் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த 16-ம் தேதி ஒரு பெண் வந்தார். அவருக்கு ராஜேஷ் பல செயின்களை எடுத்து காண்பித்தார். அந்த பெண் எதையும் வாங்காமல் சென்று சென்றுவிட்டார்.
அவர் சென்ற பிறகு செயின் ஒன்று மாயமாகி இருந்தது தெரியவந்தது. ராஜேஷ் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, அந்த பெண் செயினை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து விசாரித்த பழவந்தாங்கல் போலீஸார் மேலக்கோட்டையூரைச் சேர்ந்த பிரியங்காவை (36) கைது செய்தனர்.