

சென்னை: காசிமேடு பகுதியில் பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை, காசிமேடு பகுதியில் வசிக்கும் 38 வயது பெண்மணி ஒருவர் கடந்த வெள்ளிக் கிழமை காலை, அவரது வீட்டின் எதிரில் இருக்கும் டீக்கடையில் டீ வாங்கி கொண்டிருந்தபோது, அங்கு வந்த அவருக்கு தெரிந்த நபரான தேசப்பன் (எ) குப்புராஜ் மேற்படி பெண்ணை வழிமறித்து, ஆபாசமாக பேசி அவரது உடலை தொட்டு அநாகரிகமாக நடந்து அங்கிருந்து சென்றார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட மேற்படி பெண் N-2 காசிமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில் போலீஸார், பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (TNPHW Act) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
N-2 காசிமேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து தேசப்பன் (எ) குப்புராஜை கைது செய்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்ட தேசப்பன் மீது ஏற்கெனவே 1 குற்ற வழக்கு உள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட தேசப்பன் (எ) குப்புராஜ் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.