Published : 12 Feb 2025 12:28 AM
Last Updated : 12 Feb 2025 12:28 AM

தனியார் பள்ளி மாணவர்களிடையே மோதல்: சேலத்தில் மாணவர் உயிரிழப்பு

மேட்​டூர்: சேலம் மாவட்டம் எடப்​பாடி​யில் தனியார் பள்ளி மாணவர்​களிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த மாணவர், மருத்​துவ​மனை​யில் உயிரிழந்​தார்.

எடப்​பாடி​யில் செயல்​பட்டு வரும் தனியார் பள்ளி​யின் வேன் நேற்று முன்​தினம் மாலை வெள்​ளாண்டி வலசு அருகே சென்று கொண்​டிருந்​தது. அப்போது வேனில் இருந்த, ஒரே வகுப்​பில் பயிலும் 14 வயதுடைய இரு மாணவர்கள் தகராறில் ஈடுபட்​டுள்​ளனர். இருவரும் ஒருவருக்​கொருவர் தாக்​கிக் கொண்​டுள்​ளனர். இதில் பலத்த காயமடைந்த ஒரு மாணவர் மயங்கி விழுந்​துள்ளார்.

இதையடுத்து, அருகில் இருந்த மருத்​துவ​மனை​யில் அவர் சேர்க்​கப்​பட்​டார். பின்னர், மேல் சிகிச்​சைக்காக சேலத்​தில் தனியார் மருத்​துவ​மனை​யில் அனும​திக்​கப்​பட்ட மாணவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்​தார். இதுகுறித்து மாணவரின் பெற்​றோர் அளித்த புகாரின் பேரில், எடப்​பாடி போலீ​ஸார் வழக்கு பதிவு செய்து, தகராறில் ஈடுபட்ட மற்றொரு மாணவரை காவல் நிலை​யத்​துக்கு அழைத்து வந்து விசா​ரித்​தனர்.

ஆண்டு விழா​வின்​போது... இதில், பள்ளி​யில் கடந்த சில நாட்​களுக்கு முன்பு நடந்த ஆண்டு விழா​வின்​போது இரு மாணவர்​களிடையே தகராறு ஏற்பட்​டுள்​ளதும், நேற்று முன்​தினம் பள்ளி முடிந்து வேனில் வீட்டுக்​குச் சென்​ற​போது பெற்​றோர் குறித்து தவறாகப் பேசி​ய​தால் இருவருக்​குமிடையே வாக்கு​வாதம் ஏற்பட்டு, ஒருவருக்​கொரு​வர் ​தாக்​கிக் ​கொண்​டதும் தெரிய​வந்​தது. ​போலீ​ஸார் தொடர்ந்து ​விசா​ரித்து வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x