Published : 04 Feb 2025 12:09 AM
Last Updated : 04 Feb 2025 12:09 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கனிம வள கொள்ளைக்கு எதிராக செயல்பட்ட வெங்களூரைச் சேர்ந்த ஜகபர் அலி, ஜன.17-ம் தேதி மினி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக துளையானூர் கல் குவாரி உரிமையாளர்கள் ராமையா, ராசு உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.
15 நாட்கள் சிறை காவல் முடிந்து 5 பேரும் புதுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, 5 பேரையும் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி போலீஸார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்தமனுவை விசாரித்த நீதிபதி பாரதி, அவர்களை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT