திருப்பூரில் சட்ட விரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தினர் 15 பேர் கைது

திருப்பூரில் சட்ட விரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தினர் 15 பேர் கைது
Updated on
1 min read

திருப்பூர்: திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த ஒரு பெண் உட்பட வங்கதேசத்தினர் 15 பேர் இன்று (ஜன.28) கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர் நகரில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் லட்சக்கணக்கில் வடமாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். வடமாநிலத் தொழிலாளர்களைப் போன்று, வங்கதேசத்தினரும் இந்தியாவுக்குள் ஊடுருவி திருப்பூர், கோவை மற்றும் கரூர் உள்ள ஜவுளி நிறுவனங்களில் பணியாற்றி வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. நடப்பு மாதத்தில் மட்டும் திருப்பூரில் இதுவரை ஒரு பெண் உட்பட 83 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று நடந்த போலீஸார் சோதனையில் நல்லூர் காவல் எல்லைக்கு உட்பட்ட காசிபாளையம் காஞ்சிநகர் பகுதியில் 10 வங்கதேசத்தினர் மற்றும் திருமுருகன்பூண்டி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட வாவிபாளையத்தில் பகுதியில் 5 பேர் என மொத்தம் 15 பேர் கைது செய்தனர். இதில் வங்கதேசத்தை சேர்ந்த ஒரு பெண், நல்லூர் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி திருப்பூரில் முறைகேடாக தங்கி பணியாற்றி வந்த நிலையில், வெளிநாட்டு வாழ் தடை சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்தனர். இதுவரை மொத்தமாக நடப்பு மாதத்தில் மட்டும் திருப்பூரில் 98 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in