

புதுச்சேரி: புதுச்சேரி நகர் பகுதியில் இன்று (ஜன.19) பயங்கர சத்தத்துடன் மர்மப் பொருள் ஒன்று வெடித்துள்ளது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
பொங்கல் பண்டிகையையொட்டி புதுச்சேரி, காரைக்காலில் 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று ஞாயிறும் விடுமுறை. இந்நிலையில், புதுச்சேரி நகர் பகுதியில் இன்று பயங்கர சத்தத்துடன் மர்மப் பொருள் ஒன்று வெடித்துள்ளது. விடுமுறை என்பதால் பலரும் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த நிலையில், மர்மப் பொருள் வெடிப்பு மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது.
வெடிப்புச் சத்தைக் கேட்டு பலரும் வீடுகளை விட்டு வெளியேறினர். இதனிடையே, பட்டாசு வெடிப்பால் தான் பயங்கர சத்தம் எழுந்ததாக போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.