

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வியாசர்பாடி ரவுடி நாகேந்திரன் மற்றும் அவரது கூட்டாளிகள் வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீஸார், 51 அரிவாள், கத்திகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் அரிவாள், கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக நாகேந்திரனின் கூட்டாளிகளான தமிழரசன், முருகன், ரமேஷ், தமிழழகன், தனுஷ், சுகுமார், கிஷோர் ஆகியோரை போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.