திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேசத்தினர் 8 பேர் கைது

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேசத்தினர் 8 பேர் கைது
Updated on
1 min read

திருப்பூர்: திருப்பூர் சுற்றுவட்டாரப் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 8 பேரை, மாநகர் மற்றும் மாவட்ட போலீஸார் இன்று (ஜன.4) கைது செய்தனர்.

தமிழக ஜவுளித்துறையில் வேலை பெற வேண்டும் என்பதற்காகவே எல்லையில் அதிகளவில் வங்கதேச முஸ்லிம்கள் ஊடுருவி வருவதாக அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கடந்த 1-ம் தேதி தெரிவித்திருந்தார். திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஜவுளி மற்றும் பனியன் நிறுவனங்களில் பல லட்சம் வடமாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் அசாம் முதல்வர் பகிரங்கமாக அறிவித்ததை தொடர்ந்து, திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடந்தது.

திருப்பூர் மாநகர மங்கலம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அலோம் சேக் (40), அதேபோல் பல்லடம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமினூர்(20), சோகைல் (25), கைரூல்(25) மற்றும் ரோசன் (35), ஊத்துக்குளி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாஹீத் (45), ரிதாய் (எ) ஹிருதய் (22) மற்றும் கொக்கூன் (22) ஆகியோரை , உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களை சம்பந்தப்பட்ட போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

இவர்கள் அனைவரும் பனியன் மற்றும் ஜவுளி நிறுவனங்களில் தொழிலாளர்களாக பணியாற்றி வந்துள்ளனர். இதில் அலோம்சேக் 10 ஆண்டுகளாக தங்கி பணியாற்றி வந்ததும், ரோசன் 5 ஆண்டுகள் தங்கியிருந்ததும், போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. கைதானவர்களிடமிருந்து 4 போலி ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. மேலும் வாசிக்க>> வேலைக்காக தமிழகத்தில் குடியேறவே வங்கதேச முஸ்லிம்கள் அதிக அளவில் ஊடுருவல்: அசாம் முதல்வர் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in