

தமிழகத்தில் நடந்த ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சைபர் கிரைம் மோசடி தொடர்பாக மேற்கு வங்கத்தில் 8 இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.
தமிழகத்தில் நடந்த ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சைபர் கிரைம் மோசடி தொடர்பாக அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. கிழக்கு இந்திய மாநிலங்களை சேர்ந்த பலருக்கு இந்த மோசடியில் தொடர்பிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் இந்த மோசடி தொடர்பாக மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பார்க் ஸ்ட்ரீட், சால்ட் லேக் மற்றும் பாகுய்ஹாட்டி பகுதிகளில் 5 இடங்களிலும் கொல்கத்தா மாவட்டத்தில் 3 இடங்களிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். சால்ட் லேக் பகுதியில் நடந்த சோதனையில் ஒருவரை பிடித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.