திருநின்றவூர் | ரூ.50 லட்சம் மதிப்பிலான 3 யானை தந்தங்கள் பறிமுதல்: கார் ஓட்டுநரை விரட்டிச்சென்று பிடித்தனர்

திருநின்றவூர் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தங்கள், கைது செய்யப்பட்ட கார் ஓட்டுநர் உதயகுமாருடன் வனத் துறையினர்.
திருநின்றவூர் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தங்கள், கைது செய்யப்பட்ட கார் ஓட்டுநர் உதயகுமாருடன் வனத் துறையினர்.
Updated on
1 min read

திருவள்ளூர்: திருநின்​றவூர் பகுதி​யில் ரூ.50 லட்சம் மதிப்​பிலான 3 யானை தந்தங்களை நேற்று வனத்​துறை​யினர் பறிமுதல் செய்​தனர். இது தொடர்பாக கார் ஓட்டுநர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். திரு​வள்​ளூர் மாவட்​டம், திருநின்ற​வூர் பகுதி​யில் சிலர் யானை தந்தங்களை பதுக்கி வைத்து, விற்​பனை​யில் ஈடுட முயன்று வருவதாக நேற்று சென்னை, வனவிலங்கு குற்​றப்​பிரி​வினருக்கு ரகசிய தகவல் கிடைத்​துள்ளது.

இதையடுத்து, சென்னை வன விலங்கு குற்றப்​ பிரி​வினர், யானை தந்தங்கள் கடத்​தல், விற்பனை செய்​பவர்​களைப் பிடிக்க திட்​ட​மிட்​டனர். இதையடுத்து வன விலங்கு குற்​றப்​பிரி​வினர், நேற்று திருநின்ற​வூர் பகுதி​யில் யானை தந்தங்களை பதுக்கி வைத்​திருந்த கும்​பலிடம், அவற்றை வாங்​குவது போல் நடித்து அவர்களை திருநின்ற​வூர்- கோமதிபுரம் பகுதிக்கு காரில் வர வைத்​தனர். அப்போது, வன விலங்கு குற்​றப்​பிரி​வின் ஒரு பகுதி​யினர், திரு​வள்​ளூர் வன சரகர் அருள்​நாதன், வன பாது​காப்​பாளர் முனுசாமி தலைமையிலான வனத் துறையினர் அருகில்கார்​களில் மறைந்து இருந்​தனர்.

இதனை அறிந்த கடத்​தல்​காரர்கள் காருடன் தப்பியோட முயன்​றனர். அவர்களின், காரை துரத்தி சென்று, பிடித்த​போது, 2 பேர் தப்பியோடினர். கார் ஓட்டுநரான, காஞ்​சிபுரம் மாவட்​டம், இஞ்சமங்​கலம் பகுதியை சேர்ந்த உதயகு​மார் காருடன் சிக்​கினார். தொடர்ந்து, காரை சோதனை செய்​த​தில், காரில் ரூ.50 லட்சம் மதிப்​பிலான, 4 கிலோ எடை கொண்ட 3 யானை தந்தங்கள் இருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து, வனவிலங்கு பாது​காப்பு சட்டம் 1972-ன்படி வழக்கு பதிவு செய்த திரு​வள்​ளூர் வனத் துறை​யினர், உதயகு​மாரை கைது செய்து, அவரிடம் இருந்து யானை தந்​தங்​கள் மற்றும் ​காரை பறி​முதல் செய்​தனர். இது தொடர்பாக வனத்​துறை​யினர் தீவிர ​விசாரணை நடத்தி வரு​கின்​றனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in