மதுரை: பெண் துணை வட்டாட்சியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மதுரை: மோசடி பணத்தில் வாங்கிய சொத்தை ஏலம் விடாமல் இருக்க லஞ்சம் பெற்ற வழக்கில் பெண் துணை வட்டாட்சியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர்.

மதுரை வடக்கு தாலுகா தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியராக இருப்பவர் ஆர்.தனபாண்டி. இவரது வீடு உத்தங்குடி பொன்மணி கார்டனில் உள்ளது. இவர் 2021-ல் மாவட்ட ஆட்சியர் அலுவலக டி பிரிவில் தலைமை உதவியாளர் மற்றும் துணை வட்டாட்சியராக பணிபுரிந்து வந்தார்.

அப்போது பிளஸிங் அக்ரோ பார்ம் இந்தியா நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை திரும்ப கேட்டு பாலசுப்பிரமணியன் உட்பட 3 பேர் டான்பிட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் பழனிச்சாமி, இளங்கோ ஆகியோருக்கு பிளஸிங் அக்ரோ பார்ம் இந்தியா மேலாண்மை இயக்குனர் ஜோசப் ஜெயராஜ் விற்பனை செய்த சொத்துக்களை விற்பனை செய்து முதலீட்டாளர்களுக்கு பணத்தை வழங்க மாவட்ட வருவாய் அலுவலருக்கு டான்பிட் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த சொத்துக்களை பொது ஏலத்தில் விடும் பணியை அப்போது ஆட்சியர் அலுவலகத்தில் தலைமை உதவியாளராக பணிபுரிந்து தனபாண்டி கையாண்டுள்ளார். இரு சொத்துக்களையும் பொது ஏலத்தில் விடுவதை தாமதப்படுத்த பழனிச்சாமி, இளங்கோ ஆகியோரிடம் பல்வேறு தவணைகளில் ரூ.1.65 லட்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

இப்புகாரின் பேரில் தனபாண்டி மீது லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் வழக்கு பதிவு செய்தார். உத்தங்குடி பொன்மேனி கார்டனின் உள்ள தனபாண்டி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் ரமேஷ்பிரபு, பாரதிப்பிரியா ஆகியோர் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in