உ.பி. துணை பேராசிரியர் சென்னையில் மர்ம மரணம்: கொலையா என போலீஸ் விசாரணை

உ.பி. துணை பேராசிரியர் சென்னையில் மர்ம மரணம்: கொலையா என போலீஸ் விசாரணை
Updated on
1 min read

சென்னை: தலையில் பிளாஸ்டிக் கவர் மாட்டப்பட்ட நிலையில், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த துணைப் பேராசிரியர் ஒருவர் சென்னையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய் யப்பட்டாரா? என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் பிரகர் குமார் கர்வார் (32). இவர் சென்னை குன்றத்தூரில் உள்ள ‘சென்னை இன்ஸ் டிடியூட் ஆப் டெக்னாலஜி’என்ற தனியார் கல்லூரியில் துணைப் பேராசிரியராக மெக்கானிக்கல் துறையில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி அசனா. இவர் உத்தர பிரதேசத்திலேயே வசிக்கிறார். பிரகர் குமார் சென்னை மதுரவாயல், வக்கில் தோட்டத்தில் உள்ள ப்ருத்வி அடுக்குமாடிக் குடியிருப்பில் தனியாக அறை எடுத்து தங்கியிருந்தார்.

தினமும் அசனா, கணவருடன் இரவில் போனில் பேசுவது வழக்கம். அதேபோல், கடந்த 21-ம் தேதி இரவு 10.30 மணிக்கு கணவரை அழைத்துள்ளார். ஆனால், பிரகர் குமார் போனை எடுத்து பேச வில்லை. தொடர்ந்து பலமுறை முயன்றும் பதில் இல்லை. அதிர்ச்சி அடைந்த அசனா, கணவருடன் பணி செய்யும் சென்னையில் வசிக்கும் விஜயகுமார் என்பவரை போனில் தொடர்பு கொண்டு நடந்த விவரத்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவர் மதுரவாயல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். போலீஸார் சம்பவ இடம் விரைந்தனர். அங்கு வீட்டின் வெளிக்கதவு பூட்டப்பட்ட நிலையில் இருந்தது.

ஆனால், வீட்டின் பின்பக்கம் உள்ள பால்கனி கதவு திறந்திருந்தது. அந்த வழியாக போலீஸார் உள்ளே சென்று பார்த்தபோது பாத்ரூம் கதவு திறந்திருக்க. உள்ளே தலையில் பிளாஸ்டிக் கவர் மாட்டப்பட்டு இறந்த நிலையில் பிரகர் குமார் காணப்பட்டார். அதிர்ச்சி அடைந்த போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குற்றவாளிகள் பால்கனி வழியாக வந்து பிரகர் குமாரை கொலை செய்துவிட்டு தப்பினார்களா? அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரணை நடக்கிறது. முதல் கட்டமாக சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in