கன்னியாகுமரியில் அலையில் சிக்கி இரு குழந்தைகள் உயிரிழப்பு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்துறையில் கடல் அலையில் சிக்கி இரு குழந்தைகள் உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் பிரபு. இவர் தனது குடும்பத்துடன் கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்துறையில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தார். இந்நிலையில், நேற்று காலை தனது மகள்கள் யூதா(9), எமி(7) ஆகியோருடன் புத்தன்துறை கடற்கரைக்குச் சென்றுள்ளார். அங்கு அவர்கள் கடல் நீரில் கால்நனைத்தவாறு விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது வேகமாக வந்த பெரிய அலை யூதா, எமி ஆகியோரை இழுத்துச் சென்றது. அதிர்ச்சியடைந்த பிரபு, தனது மகள்களைக் காப்பாற்றப் போராடினார். அவரையும் கடல் அலை இழுத்துச் சென்றது. கடற்கரையில் நின்றிருந்த மீனவர்கள் கடலுக்குள் இறங்கி 3 பேரையும் மீட்டு கரை சேர்த்தனர். இதில் இரு குழந்தைகளும் தண்ணீரில் மூழ்கி மயக்கமடைந்திருந்தனர்.

அங்குள்ள மருத்துவமனைக்கு அவர்களை கொண்டு சென்றபோது, குழந்தைகள் இருவரும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in