போதையில் போலீஸாரை தாக்கிய 8 இளைஞர்கள் கைது: ராஜபாளையத்தில் வீடியோ வெளியாகி வைரல்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் போதையில் இருந்த இளைஞர்கள், போலீஸாரை தாக்கிய வீடியோ காட்சி.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் போதையில் இருந்த இளைஞர்கள், போலீஸாரை தாக்கிய வீடியோ காட்சி.
Updated on
1 min read

ராஜபாளையம்: மது போதையில் தகராறு செய்த இளைஞர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்திய போலீஸாரை தாக்கிய வீடியோ வெளியாகி, ராஜபாளையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 8 பேரை கைது செய்த போலீஸார், மேலும் இருவரைத் தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் நேரு சிலை அருகேயுள்ள தனியார் பார் முன் கடந்த 10-ம் தேதி இரவு இளைஞர்கள் சிலர் பிரச்சினை செய்து கொண்டிருந்ததாக, ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்துக்குப் புகார் வந்தது. இதையடுத்து, தலைமைக் காவலர்கள் ராம்குமார், கருப்பசாமி ஆகியோர் அங்கு சென்று, பிரச்சினை செய்து கொண்டிருந்த இளைஞர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

ஆனால், அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்த இளைஞர்கள், காவலர்கள் வைத்திருந்த லத்தியைப் பறித்து, அவர்களை கடுமையாகத் தாக்கினர். தகவலறிந்து வந்த போலீஸார் காயமடைந்த இருவரையும் மீட்டு,ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதையடுத்து, காவலர்களை தாக்கிய ராஜபாளையம் கீழ ஆவாரம்பட்டி தெருவைச் சேர்ந்த பால்பாண்டி (31), கிளிராஜன் (24), பாஞ்சாலிராஜா(40), பாண்டியராஜ்(22), சரவண கார்த்திக்(33), முத்துராஜ்(32) ஆகியோரையும், அவர்களுக்கு அடைக்கலம் அளித்ததாக வனராஜ்(25), சரவண கார்த்திக்(32) ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய தர்மலிங்கம்(32), மணிகண்டன் (20) ஆகியோரைத் தேடிவருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in