நடிகை நிவேதா பெத்துராஜிடம் பணம் பறித்து தப்பிய 8 வயது சிறுவன்

நிவேதா பெத்துராஜ் | கோப்புப் படம்
நிவேதா பெத்துராஜ் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: நடிகை நிவேதா பெத்துராஜ், அட்டை கத்தி தினேசுடன் ‘ஒருநாள் கூத்து', உதயநிதி ஸ்டாலினுடன் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ உட்பட பல்வேறு தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். அவரிடம் சிறுவன் ஒருவன் பணம் பறித்துச் சென்றுள்ளான்.

இது தொடர்பாக நடிகை நிவேதா பெத்துராஜ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டு இருப்பதாவது: சென்னை அடையார் சிக்னலில் 8 வயது சிறுவனால் ஏமாற்றப்பட்டேன். அவன் ஒரு புத்தகத்தை ரூ.50-க்கு என்னிடம் விற்பனை செய்ய முயன்றான். நான் ரூ.100 கொடுத்தேன். அப்போது அந்த சிறுவன் என்னிடம் ரூ.500 கேட்டான். நான் புத்தகத்தை அவனிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு, 100 ரூபாயை மீண்டும் வாங்கினேன். அந்த நேரத்தில் புத்தகத்தை காருக்குள் வீசிய சிறுவன், என் கையில் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு ஓடிவிட்டான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் அந்த பதிவில், ‘இந்த பிரச்சினையை நீங்கள் சந்தித்து உள்ளீர்களா?' எனவும் கேள்வி எழுப்பி எஸ் (Yes), நோ (No) என்ற ஆப்ஷனையும் வழங்கி உள்ளார். இந்த விவகாரம் சமூகவலை தளங்களில் வைரலானது. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து அடையாறு போலீஸார் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in