பழநியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மர்ம மரணம்

பழநியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மர்ம மரணம்
Updated on
1 min read

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முல்லை நகரைச் சேர்ந்த இளங்குமரன் (57), எலெக்ட்ரானிக் பொருட்கள் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி ரேணுகா தேவி(54), மேல்கரைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்தார். இவர்களது மகன் வினித் (24), மகள் தேன்மொழி (17). வினித் கோவையில் தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

தேன்மொழி தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில், இவர்களது வீடு நேற்று நீண்டநேரமாக திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீஸுக்குத் தகவல் தெரிவித்தனர். போலீஸார் வீட்டின் கதவை உடைத்துச் சென்று பார்த்தபோது, இளங்குமரன் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். மற்றொரு அறையில் ரேணுகாதேவி, தேன்மொழி ஆகியோர் இறந்து கிடந்தனர். மூவரது உடல்களையும் மீட்ட போலீஸார், பழநி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவர்கள் மூவரும் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது ரேணுகாதேவி, தேன்மொழியைக் கொலை செய்துவிட்டு, இளங்குமரன் தற்கொலை செய்துகொண்டாரா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in