தூத்துக்குடி அருகே ரூ.30 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்: வீட்டில் பதுக்கி வைத்திருந்தவர் கைது

தூத்துக்குடி அருகே ரூ.30 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்: வீட்டில் பதுக்கி வைத்திருந்தவர் கைது
Updated on
1 min read

தூத்துக்குடி: முறப்பநாடு பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.30 கோடி மதிப்பிலான சாரஸ்மற்றும் கேட்டமைன் போதைப் பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவர் தூத்துக்குடி மாவட்ட போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பகுதியில் ஒரு வீட்டில் போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தருவைகுளம் கடலோரப் பாதுகாப்பு குழுமப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து தலைமையிலான போலீஸார், முறப்பநாட்டில் உள்ள துரைபாண்டியன் (48) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

சாரஸ், கேட்டமைன்... அப்போது, கஞ்சா செடியின் பிசினில் இருந்து தயாரிக்கப்படும் ‘சாரஸ்' என்ற போதைப் பொருள் 50 கிலோ, கேட்டமைன் என்ற போதைப் பொருள் 5 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் சர்வதேச மதிப்புரூ.30 கோடி என்று கூறப்படுகிறது. பின்னர், துரைபாண்டியனை கைது செய்த போலீஸார், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். மேலும், துரை பாண்டியனிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in