நெய்வேலி | சான்றிதழ் முறைகேட்டில் ஈடுபட்ட 3 காவலர்கள் சஸ்பெண்ட்: கடலூர் எஸ்பி நடவடிக்கை

நெய்வேலி | சான்றிதழ் முறைகேட்டில் ஈடுபட்ட 3 காவலர்கள் சஸ்பெண்ட்: கடலூர் எஸ்பி நடவடிக்கை
Updated on
1 min read

கடலூர்: நெய்வேலி அருகே ஊமங்கலம் காவல் நிலையத்தில் சான்றிதழ் முறைகேட்டில் ஈடுபட்ட 3 காவலர்களை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜா ராம் சஸ்பெண்ட் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

வடலூர் -விருத்தாசலம் சாலையில் நெய்வேலி அருகே ஊமங்கலம் காவல் நிலையம் உள்ளது. இந்த காவல் நிலையத்தில் பொது மக்களின் புகார் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றும் சங்கு பாலன், காவல் நிலைய எழுத்தர் கௌதம், தலைமை காவலர் சுதாகர் ஆகியோர் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் தினக்கூலி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு, இவர்கள் மீது எந்த வழக்கும் இல்லை என்று தரப்படும் நற்சான்றிதழில் காவல் நிலைய ஆய்வாளரின் கையெழுத்தை,‌ இவர்களே போட்டு பலரிடம் தந்து பணம் பெற்றுள்ளதாக புகார் எழுந்தது.

இது குறித்து விசாரணை நடத்தியதில் அது உண்மை என தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து இன்று காலை உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in