

சென்னை: ரீல்ஸ் பார்த்தபடி அரசு பேருந்தை ஓட்டிய தற்காலிக ஓட்டுநர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பதியில் இருந்து பயணிகளுடன் சென்னை மாதவரம் நோக்கி வந்த அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர், செல்போனில் ரீல்ஸ் பார்த்தபடியே கவனக் குறைவாக பேருந்தை ஓட்டினார். சுமார் 2 கி.மீ தூரம் வரையிலும், சாலையை கவனிக்காமல் ஓட்டுநர் வாகனத்தை இயக்கியதை பயணி ஒருவர், தனது செல்போனில் வீடியோ எடுத்திருந்தார். இது தொடர்பாக போக்குவரத்து பணிமனையில் அவர் புகாரளித்த நிலையில், வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் அந்த ஓட்டுநர் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து விழுப்புரம் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘‘வீடியோவில் வரும் ஓட்டுநர் விழுப்புரம் கோட்டம், திருவள் ளூர் மண்டலம், கோயம்பேடு II பணிமனையை சார்ந்த தற்காலிக ஓட்டுநர் பார்த்திபன் ஆவார். அவர் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்போதுநிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.