அபுதாபி - கோவை விமானத்தில் ரூ 1.4 லட்சம் மதிப்பிலான கடத்தல் சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல்

அபுதாபி - கோவை விமானத்தில் ரூ 1.4 லட்சம் மதிப்பிலான கடத்தல் சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல்
Updated on
1 min read

கோவை: அபுதாபியில் இருந்து இன்று (அக்.7) காலை கோவை வந்த விமானத்தில் பயணி ஒருவரிடம் இருந்து ரூ 1.4 லட்சம் மதிப்பிலான கடத்தல் சிகரெட் பாக்கெட்களை விமான நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை- அபுதாபி இடையே வாரத்தில் செவ்வாய், வியாழன், சனி ஆகிய மூன்று நாட்கள் விமான சேவை வழங்கப்படுகிறது. இன்று காலை 6.30 மணியளவில் அபுதாபியில் இருந்து கோவை வந்த விமானத்தில் பயணித்தவர்களிடம் விமான நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பயணி ஒருவரின் உடமையை ஆய்வு செய்த போது அதில் 'எஸ்சி' என்ற வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்கள் முன்புறம் வேறு உணவு பொருள் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு கடத்தி கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. மொத்தம் ரூ 1.4 லட்சம் மதிப்பிலான 14 ஆயிரம் சிகரெட்கள் இருந்தன அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், பயணி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in