மகாராஷ்டிராவில் ரூ.300 கோடி மோசடி: உத்தர பிரதேச மாநிலத்தில் சாதுவாக வாழ்ந்தவர் கைது

மகாராஷ்டிராவில் ரூ.300 கோடி மோசடி: உத்தர பிரதேச மாநிலத்தில் சாதுவாக வாழ்ந்தவர் கைது
Updated on
1 min read

ஆக்ரா: மகாராஷ்டிராவில் ரூ.300 கோடி சுருட்டியவர் உத்தர பிரதேசம் விருந்தாவனில் சாதுவாக வாழ்ந்து வந்தார். அவரை போலீஸார் கைது செய்தனர்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் பாபன் விஸ்வநாத் ஷிண்டே. முதலீடுகளுக்கு அதிக வட்டி தருவதாக கூறி இவர் மக்களை ஏமாற்றி வந்துள்ளார். ஜீஜாவ் மாசாகிப் மல்டி ஸ்டேட் வங்கி என்ற கூட்டுறவு வங்கியின் 4 கிளைகளில் முதலீட்டு பணத்தை செலுத்தும்படி இவர் மக்களிடம் கூறியுள்ளார். இவர் மீது நம்பிக்கை வைத்து ஏராளமானோர் முதலீடு செய்துள்ளனர். இந்நிலையில் முதலீட்டு பணம் ரூ.300 கோடியை சுருட்டிக் கொண்டு பாபன் விஸ்வநாத் ஷிண்டே கடந்தாண்டு தலைமறைவானார்.

மகாராஷ்டிராவின் பீட் மற்றும் தாராசிவ் ஆகிய மாவட்டங்களில் இவர் மீது 5 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தலை மறைவான விஸ்வநாத் ஷிண்டே உத்தர பிரதேசத்தின் மதுரா மாவட்டத்தில் உள்ள விருந்தாவன் கிருஷ்ண கோபால் கோயில் அருகே சாதுவாக வசித்து வந் துள்ளார்.

இதை கண்டுபிடித்த மகா ராஷ்டிரா குற்றப் பிரிவு போலீஸார் விருந்தாவன் வந்து, உள்ளூர் போலீஸார் உதவியுடன் பாபன் விஸ்வநாத் ஷிண்டேவை கைது செய்தனர். உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட விஸ்வநாத் ஷிண்டே, விசாரணைக்காக மகாராஷ்டிரா அழைத்துச் செல்லப் பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in