

சென்னை: சென்னையில் போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து சிறுவன் தப்பி ஓடிய நிலையில், அச்சிறுவன் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
திருட்டு, வழிப்பறி உட்பட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 18 வயதுக்கு உட்பட்ட இளஞ்சிறார்கள் கெல்லீஸில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் திருட்டு வழக்கில் கைதாகி கெல்லிஸ் அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்த 16 வயது சிறுவன், (ஏற்கெனவே போதை பழக்கத்துக்கு அடிமையானவர்) சென்னை திருமங்கலத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் போதை மறுவாழ்வு மையத்திலிருந்து அச்சிறுவன் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இவ்விவகாரம் குறித்து திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திருமங்கலம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.